ar

கோல்டன் குளோப் விருது பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக மிக உயர்ந்த விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது பட்டியலில் இந்தாண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் உள்ளூர், வெளியூர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஹாலிவுட் வெளிநாட்டு செய்தி அசோசியேசன் சார்பில் கோல்டன் குளோப் விருது வழங்கப்படுகிறது. இதில் “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்திற்காக முதன்முதலில் இரட்டை ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், அதேபடத்திற்காக கடந்த 2009ம் ஆண்டு கோல்டன் குளோப் விருது பெற்றார். இந்நிலையில் இந்த ஆண்டும் இவ்விருது பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் ‌பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. “127 ஹவர்ஸ்” என்ற படத்திற்காக அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தைய இயக்கிய டேனி போயல் இப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Macys Printable Coupons